நாடு முழுவதும் பிளாட்வாசிகளை குலைநடுங்கவிட்ட பெங்களூரு கோரம்.. புதிய பிளாட் எப்படி சரிந்தது?

x

நாடு முழுவதும் பிளாட்வாசிகளை குலைநடுங்கவிட்ட பெங்களூரு கோரம் - புதிய பிளாட் எப்படி சரிந்தது? திடுக் காரணம் அம்பலம்

பெங்களூருவை பதம் பார்த்த வடகிழக்கு பருவ மழையால், புதிதாக கட்டப்பட்டு வந்த 7 அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் பலி எண்ணிக்கை 8 ஆக அதிகரித்திருப்பது பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது...

தெற்கு கர்நாடகாவில் வெளுத்து வாங்கி வரும் வடகிழக்கு பருவமழையால் பெங்களூரு மாநகரமே வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. திரும்பும் திசை எங்கும் தேங்கியிருக்கும் மழைநீரால், மக்கள் தவிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.

இதில், அதிகபட்சமாக யெலஹங்கா பகுதியில் 157 மி.மீ. மழை பெய்திருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில்தான், மனதை நடுங்க வைக்கும் அந்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது..

ஹென்னூர் அருகே புதிதாக கட்டப்பட்டுக் கொண்டிருந்த 7 அடுக்குமாடி கட்டடம் முற்றிலுமாக இடிந்து விழுந்து பல உயிர்களைக் காவு வாங்கியிருக்கிறது...

இந்த கோர விபத்தில், பலி எண்ணிக்கை 6-ஐ கடந்து சென்றிருப்பது மனதை ரணமாக்கி இருக்கிறது..

மழையின் கோர தாண்டவத்தின் நடுவே, கட்டிடத்திற்கு உள்ளே இருந்த டைல்ஸ் ஒட்டும் பணியாளர்கள், கான்கிரீட் போடுபவர்கள், ப்ளம்பர்கள் என சுமார் 21 பேர் வரை சிக்கியது அக்கம்பக்கத்தினரை கதிகலங்க வைத்திருக்கிறது..

இதுவரை, 14 பேர் பலத்த காயங்களுடனும் மீட்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தொடர்ந்து அங்கு தேசிய பேரிடர் மீட்பு படையினர், மாநில பேரிடர் மீட்புப்படையினர், உள்ளூர் தீயணைப்பு வீரர்கள் எனக் கொட்டும் மழையிலும் மீட்புப்பணிகள் தொடர்கின்றன..

அஸ்திவாரம் பலவீனமாக இருந்ததே இந்த விபத்துக்கு காரணம் என்று விசாரணையில் தெரியவந்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

அந்த பகுதியில் 4 மாடி கட்டிடங்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், சட்டவிரோதமாக 7 அடுக்குமாடி கட்டியது அம்பலமாக உரிமையாளரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்...


Next Story

மேலும் செய்திகள்