முதுமலையில் பட்டாசு வெடிக்க தடை..! வனத்துறையினர் நோட்டீஸ்

x

ஊட்டி முதுமலையில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஊட்டி முதுமலை மற்றும் வெளிமண்டல வனப்பகுதியில் யானை, கரடி, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் மற்றும் அரிய வகை பறவைகள் உள்ளன. இதனால் வனப்பகுதி ஒட்டி உள்ள கிராமங்களில் அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிக்க வேண்டாம் என்று வனத்துறையினர் நோட்டிஸ் வழங்கி வருகின்றனர். ராக்கெட் போன்ற பட்டாசு வெடிப்பதால், காட்டுத் தீ ஏற்படும் வாய்ப்பு உள்ளதால் இந்த பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தீபாவளியின்போது வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்