பழனி கோவிலுக்குள் மொபைல் போன், கேமிரா கொண்டு வர தடை...வெளியான அறிவிப்பு

x

இதுகுறித்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது கோயிலின் இணை ஆணையரின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில், கோயிலுக்குள் மொபைல் போன் கொண்டு செல்லகூடாது என ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், பக்தர்கள் தங்கும் இடங்களில் விளம்பரபடுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கபட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. பக்தர்களும் பரிசோதிக்கபடுவர் என்றும், இதையும் மீறி பக்தர்கள் எவரேனும் கேமரா போன்ற பொருட்களை கொண்டு வந்து புகைப்படம் எடுத்தால் குற்ற நடவடிக்கை எடுக்கபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், இந்த நடைமுறைகளை அனைத்து கோயில்களிலும் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தி, இந்த வழக்கில் விரிவான உத்தரவு பிறப்பிப்பதாக கூறி, வழக்கின் விசாரணையை தள்ளி வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்