தலைக்குப்புற கவிழ்ந்து கார் விபத்து...பின்னணியில் சொத்து பிரச்சனை? - கள்ளக்குறிச்சியில் அதிர்ச்சி
சின்னசேலம் அருகே, சொத்துப் பிரச்சினை காரணமாக பெண் மீது கார் ஏற்றி கொல்ல முயற்சித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.சேலம் - விருதாச்சலம் தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக வந்த கார், கீழ்குப்பம் பெட்ரோல் பங்க் அருகே தலைக்குப்புற கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் பெண் ஓட்டி வந்த ஸ்கூட்டர் மற்றும் எதிரில் வந்த இரண்டு இருசக்கர வாகனங்கள் மீது கார் மோதியது. நல்வாய்ப்பாக அவர்கள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இந்த சூழலில், ஸ்கூட்டர் ஓட்டி வந்த பெண்ணுக்கு சொத்து பிரச்சனை தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில், கொலை முயற்சியாக இருக்கலாம் என கூறி, அந்த பெண்ணின் உறவினர்கள் கார் ஓட்டி வந்தவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனிடையே வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.
Next Story