"வேலையை சரியா செய்ங்க" - அதிகாரிகளை கடிந்து கொண்ட மேயர் | Avadi | Mayor

x

நாடாளுமன்ற தேர்தலில் அதிகாரிகள் கெட்ட பெயரை தான் வாங்கி தர போகிறீர்கள் என ஆவடி மாநகராட்சி கூட்டத்தில் மேயர் உதயகுமார் கடிந்து கொண்டார்.

ஆகஸ்ட் மாதத்திற்கான மாமன்ற உறுப்பினர்கள் கூட்டம் மேயர் உதயகுமார் தலைமையில் நடைபெற்றது. இதில் பேசிய 5 வது வார்டு கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர் ஜான், கடந்த முறை மாமன்றத்தில் வைத்த கோரிக்கைகளை அதிகாரிகள் செயல்படுத்தவில்லை என்று குற்றம்சாட்டினார். மேயர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். அப்போது குறுக்கிட்ட மேயர் உதயகுமார், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காதது ஏன் என்றும், நாடாளுமன்ற தேர்தலில் கெட்ட பெயரை தான் வாங்கி தர போகிறீர்கள் என்று கடிந்து கொண்டார்.


Next Story

மேலும் செய்திகள்