தீர்ப்பு கொடுத்த அதிர்ச்சி - வெளியான மேயரின் மிரட்டல் ஆடியோ?

x

தீர்ப்பு கொடுத்த அதிர்ச்சி - வெளியான மேயரின் மிரட்டல் ஆடியோ?


நில விவகாரத்தில் கொலை மிரட்டல் விடுத்த காரைக்குடி மாநகராட்சி மேயரின் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. காரைக்குடி மேயர் முத்து துரை, விஜயராகவன் என்பவருக்கு சொந்தமான நிலத்தை முறைகேடாக தனது பெயரில் மாற்றியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான வழக்கு விஜயராகவனுக்கு சாதகமாக தீர்ப்பானது, இந்நிலையில், அந்த நிலத்தை வாங்கிய விஜயராகவனின் உறவினர் கணேஷை, மேயர் முத்துதுரை மிரட்டியுள்ளார். அதேசமயம், அந்த ஆடியோவில் உள்ள குரல் தன்னுடையது அல்ல என முத்துதுரை விளக்கம் அளித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்