மருத்துவமனையில் குழந்தை கடத்த முயற்சி - இளைஞரை கைது செய்ய உதவிய சிசிடிவி
நாகர்கோவில் அருகே, தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இரண்டரை வயது பெண் பெண் குழந்தை கடத்த முயற்சி செய்த வழக்கில், இளைஞரை போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணன் கோயில் பகுதியை சேர்ந்த தம்பதியின் இரண்டரை வயது குழந்தை காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அதே பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தது. அப்போது மருத்துவமனை அறைக்குள் நுழைந்த நபர், குழந்தையை தூக்கிச் சென்ற முயன்றதாக பெற்றோர் புகார் அளித்தனர். அதன் பேரில், சிசிடிவி காட்சி உதவியுடன் சிவா என்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
Next Story