கேரளாவில் தமிழக டிரைவர் மீது தாக்குதல் - தடுக்க முயன்ற தமிழக பெண்ணுக்கும் மிரட்டல்...தீயாய் பரவும் அதிர்ச்சி வீடியோ

x

கேரளாவில் தமிழக ஜீப் ஓட்டுநர்களை சிலர் தாக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணகாகானோர் ஜீப், பேருந்துகளில் கேரள மாநில பகுதிகளுக்கு வேலைக்கு செல்கின்றனர். இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு தமிழக எல்லையை ஒட்டிய கேரளா பகுதியான சேத்துக்குளியில் தமிழக ஜீப்பை வழிமறித்த சிலர், மதுபோதையில் ஓட்டுநரை தாக்கினர். அப்போது, அவர்களை தடுக்க முயன்ற தமிழக பெண் தொழிலாளர்களையும் ஆபாசமாக பேசி மிரட்டல் விடுத்தனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்