பேரிக்கார்டை நகர்த்த முயன்றபோது காவலர் மீது தாக்குதல் - 3 பேர் மீது வழக்குப்பதிவு

x

சென்னையில் காவலரை தாக்கியதாக திமுக நிர்வாகிகள் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திரு.வி.க.நகர் திமுக நிர்வாகியான சாமிக்கண்ணு மற்றும் அவரது 2 மகன்கள், பேரிக்கார்டை நகர்த்தி செல்ல முயன்றதாகவும், அதை தடுத்த தலைமைச்செயலக காலனி காவலர் கார்த்திக் என்பவரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் திமுக நிர்வாகிகள் 3 பேர் மீது காயம் ஏற்படுத்துதல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்