ஏடிஎம்யில் பெண்ணிக்கு நேர்ந்த நிலை.. வெளியான பகீர் வீடியோ | Thoothukudi

x

ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள அரியநாயகபுரத்தை சேர்ந்தவர் லதா. 46 வயதான இவர், சில நாள்களுக்கு முன் அருகில் உள்ள தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி ஏடிஏம்மில் பணமெடுக்க சென்றிருக்கிறார். இதில், லதாவுக்கு ஏடிஎம்மில் பணமெடுக்க தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அருகில் இருந்த நபர் ஒருவரிடம் ஏடிஎம் கார்டை கொடுத்து 5 ஆயிரம் ரூபாய் பணம் எடுத்து தருமாறு லதா உதவி கோரியிருக்கிறார். ஏடிஎம் கார்டை வாங்கிய அந்த நபர், பணம் எடுத்து கொடுத்ததோடு நாசுக்காக ஏடிஎம் கார்டை மாற்றிக் கொடுத்திருக்கிறார். தொடர்ந்து, அவ்வப்போது பெண்னின் ஏடிஎம்மை பயன்படுத்தி சுமார் 29 ஆயிரம் வரை எடுத்து அந்நபர் மோசடி செய்தது அம்பலமானது. வங்கியில் இருந்து வந்த அடுத்தடுத்த மிசேஜ்களால் சந்தேகமடைந்து, வங்கியில் சென்று லதா விசாரித்த போது இந்த மோசடி வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. அதிர்ச்சியடைந்த பெண், சம்பவம் குறித்து போலீசில் புகாரளித்திருக்கும் நிலையில், வழக்குபதிவு செய்திருக்கும் போலீசார் ஏடிஎம் சிசிடிவி காட்சி உதவியுடன் மர்மநபரை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்