நனவான 60 ஆண்டுகால கனவு..கொங்கு மண்டலமே பெரு மகிழ்வில் தேங்காய் உடைத்து கொண்டாட்டம்

x

நனவான 60 ஆண்டுகால கனவு..கொங்கு மண்டலமே பெரு மகிழ்வில் தேங்காய் உடைத்து கொண்டாட்டம்

அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை நிறைவேற்ற தி.மு.க. அரசு கால தாமதம் செய்ததாக, பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறிய குற்றச்சாட்டுக்கு, அமைச்சர் முத்துசாமி விளக்கம் அளித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தி.மு.க. அரசு அமைந்ததும், அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தின் முன்னேற்றம் குறித்து முதலமைச்சர் ஸ்டாாலின் ஆய்வு செய்ததாக குறிப்பிட்டுள்ளார்.

அப்போது தான் பல இடங்களில் நிலம் கையகப்படுத்தவில்லை என்பது தெரிய வந்ததாக கூறியுள்ளார். அதன் பின், நில எடுப்பு பணிகளுக்கு ஒப்புதல் பெறப்பட்டு, 2023 ஜனவரி 23ம் தேதி பணிகள் முடிக்கப்பட்டதாக விளக்கம் அளித்துள்ளார். பா.ஜ.க. போராட்டம் நடத்தும் என்ற காரணத்தால் தான் திட்டம் துவங்கப்படுவதாக அண்ணாமலை சொல்வது முழுக்க முழுக்க தவறானது என்றும், உபரிநீர் பற்றாக்குறையே இத்திட்டம் துவங்க காலதாமதம் ஆனதற்கு காரணம் என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை என்றும்

அமைச்சர் முத்துசாமி கூறியுள்ளார். நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு இன்னும் சில நாட்களில் சென்றடையும் என்றும் அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். முதலமைச்சரும், நீர்வளத்துறை அமைச்சரும் அக்கறையோடு ஆய்வு மேற்கொண்ட காரணத்தால், அத்திக்கடவு-அவிநாசி திட்டம் தற்போது பயன்பாட்டிற்கு வரும் நிலை ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்