குமரியில் இன்ஸ்பெக்டர் பூட்ஸ் லேஸை கட்டிவிட்ட ஏட்டய்யா - சுதந்திர தின விழாவில் அதிர்ச்சி
கன்னியாகுமரியில் ஆயுதப்படை காவல் ஆய்வாளரின் பூட்ஸ் லேஸை, தலைமை காவலர் கட்டி விட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கில், மாவட்ட நிர்வாகம் சார்பில் சுதந்திர தின விழா கொண்டாட்டம் நடைபெற்றது. அப்போது, ஆயுதப்படை காவல் ஆய்வாளரான சுஜாதா என்பவரின் பூட்ஸ் லேஸ் அவிழ்ந்து விட, அதனை தலைமை காவலர் சித்ரா கட்டிவிட்டுள்ளார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
Next Story