அரசு பள்ளிக்கு கழிப்பறை கட்டி தருவதாக உறுதி - ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்

x

அரசு பள்ளிக்கு கழிப்பறை கட்டி தருவதாக உறுதி அளித்த 2 பேருக்கு ஜாமின் வழங்கி, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தேவகோட்டையச் சேர்ந்த மலைராஜ், பிரான்சிஸ் ஆகியோர் தாக்கல் செய்த மனுவில், புகையிலை பொருட்களை விற்ற குற்றத்திற்காக போலீசார் தங்களை கைது சிறையில் அடைத்ததாக குறிப்பிட்டிருந்தனர். அப்போது, வாதிட்ட மனுதாரர் வழக்கறிஞர், அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் புதிய கழிப்பறை கட்டித் தருவதாகவும், எனவே இருவரின் உடல் நிலையை கருத்தில் கொண்டு, பிணை வழங்கி உத்தரவிட வேண்டும் என கோரினார். இதனை ஏற்ற நீதிபதி மலைராஜ், பிரான்சிஸ் ஆகிய இருவருக்கும் பிணை வழங்கி உத்தரவு பிறப்பித்தார்


Next Story

மேலும் செய்திகள்