BREAKING || "நீங்கள் 1 அடி எடுத்து வைத்தால் நாங்கள் 2 அடியை எடுத்து வைப்போம்" - தமிழக அரசுக்கு மத்திய அரசு அனுப்பிய செய்தி

x

"நீங்கள் 1 அடி எடுத்து வைத்தால் நாங்கள் 2 அடியை எடுத்து வைப்போம்" - தமிழக அரசுக்கு மத்திய அரசு அனுப்பிய செய்தி

மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்.

தமிழகத்தில் புதிய ரயில்வே வழித்தடங்கள் இருவழிப்பாதை மற்றும் வாடிக்கையாளர்களுக்கான வசதிகள் தொடர்பான திட்டங்களுக்கு போதுமான அளவுக்கு நிதி ஒதுக்கப்படுவதை உறுதி செய்திட வேண்டும் என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு தமிழக

முதல்வர் ஸ்டாலின் நேற்று

கடிதம் எழுதியிருந்தார்.

24-2025 நிதியாண்டில் வழக்கமான ரயில்வே பட்ஜெட்டில் தெற்கு ரயில்வே திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறிப்பிடத்தக்க அளவுக்குக் குறைந்திருப்பதால் அதன் விளைவாக தமிழகத்தில் திட்டங்கள் செயல்படுத்தப்படுவதில் தாக்கம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் புதிய வழித்தடங்கள், இரட்டைப் பாதை மற்றும் வாடிக்கையாளர்களுக்கான வசதிகள் தொடர்பான திட்டங்களுக்குப் போதுமான அளவுக்கு நிதி ஒதுக்கப்படுவதை உறுதி செய்திட வேண்டும் என தமிழக முதல்வர் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதற்கு பதில் அளித்துள்ள மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தமிழகத்தில் ரயில்வே திட்டங்களை செயல்படுத்த தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ரூ.6362 கோடி ரூபாய் ஒதுக்கி இருப்பதாகவும் இது முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ஆண்டுக்கு சராசரியாக ஒதுக்கப்பட்ட ரூ.879 கோடியை விட ஏழு மடங்கு அதிகம் என தெரிவித்துள்ளார்

நமது இந்திய அரசியல் சாசனத்தின் படி நிலம் என்பது மாநில அரசின் விவகாரம் என குறிப்பிட்டுள்ள அவர் நிலம் கையகப்படுத்துவதில் உங்கள் அரசு துரிதமாக செயல்பட்டதால் தமிழகத்தில் ரயில்வே திட்டங்களை நடைமுறைப்படுத்த முடியும் என தெரிவித்துள்ளார்

2749 ஹெக்டேர் நிலம் தேவைப்படும் நிலையில் இதுவரை 807 நிலம் மட்டுமே கையகப்படுத்தப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ள அஸ்வினி வைஷ்ணவ் நிலம் கையகப்படுத்த விவகாரத்தில் தமிழக முதல்வர் தலையிட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழகத்தில் ரயில்வே திட்டங்களை மேம்படுத்த நீங்கள் ஒரு அடி எடுத்து வைத்தால் நாங்கள் இரண்டு அடியை எடுத்து வைப்போம் எனவும் தான் உறுதி அளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்


Next Story

மேலும் செய்திகள்