ஓ இதுதான் இருட்டுக்கடை அல்வாயா? நெல்லையில் லைவாக ருசி பார்த்த அஸ்வின்

x

நெல்லை இருட்டுக்கடை அல்வாவை கிரிக்கெட் வீரர் அஸ்வின் சுவைத்து மகிழ்ந்தார். டிஎன்பிஎல் தொடருக்காக நெல்லை வந்துள்ள அஸ்வின், பிரபல இருட்டுக்கடை அல்வா குறித்து கேள்விப்பட்டு அந்தக் கடைக்குச் சென்றார். தொடர்ந்து அல்வாவை வாங்கி சுவைத்த அஸ்வின், அல்வாவின் சிறப்பு குறித்து கடையின் பணியாளர்களிடம் கேட்டறிந்தார். அஸ்வின் வந்த தகவலை அறிந்து அப்பகுதியில் ரசிகர்கள் குவிந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்