அசோக்குமாரை கைது செய்யவில்லை-ED விளக்கம்
சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில்பாலாஜியை கடந்த ஜுன் மாதம் 14 ம் தேதி அமலாக்கதுறையினர் கைது செய்தனர். தொடர்ச்சியாக இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாரை விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கதுறையினர் 4 முறை சம்மன் அனுப்பினர். ஆனால் அவர் தொடர்ந்து ஆஜராகாமல் இருந்து வருகிறார். இந்த நிலையில் அசோக்குமாரை கேரளா மாநிலம் கொச்சி விமான நிலையத்தில் வைத்து அமலாக்கதுறையினர் கைது செய்ததாக
தகவல் வெளியானது. இதுகுறித்து அமலாக்கதுறை அளித்துள்ள விளக்கத்தில் தற்போது வரை அசோக்குமாரை கைது செய்யவில்லை என தெரிவித்துள்ளது. மேலும் அசோக்குமாரின் மனைவி நிர்மலா மற்றும் நிர்மலாவின் தாயார் லட்சுமி ஆகியோருக்கும் சம்மன் அனுப்பட்டுள்ளதாகவும், ஆனால் அவர்களும் ஆஜராகவில்லை என அமலாக்கத்துறை விளக்கம் அளித்துள்ளது. மேலும் இந்த மோசடியில் மூவருக்கும் முக்கிய பங்கு இருப்பதாக, தங்களுக்கு கிடைத்த ஆதாரங்களின் மூலம் தெரியவந்துள்ளதாகவும் அமலாக்கதுறையினர் தெரிவித்துள்ளனர்.