கலைஞர் மகளிர் உரிமைத் தொகை - இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் வலியுறுத்தல் | Magalir Urimaithogai

x

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறுவோரிடம், குறைந்த பட்ச இருப்பு அடிப்படையில் வங்கி நிர்வாகங்கள் அபராதம் விதிக்க‌க் கூடாது என்று இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.

இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் ரவிக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளதாக கூறியுள்ளார். ஆனால், வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் இந்த பணத்தை பெண்கள் எடுக்க முயலும் போது, பலவிதமான பிரச்சனைகளுக்கு உள்ளாவதாக குறிப்பிட்டுள்ளார். குறைந்த பட்ச இருப்பு, குறுஞ்செய்தி கட்டணம் என்ற பெயரில் இந்த நலத்திட்டத்தில் கணிசமான பகுதியை பிடித்தம் செய்ய வங்கிகள் முனைவதாகவும், இது முழுவதும் தவறான நடவடிக்கை என்றும் அவர் கூறியுள்ளார். வங்கிகள் உடனடியாக இந்த நலத் திட்டத்திலிருந்து பிடித்தம் செய்வதை நிறுத்த வெண்டும் என வலியுறுத்தியுள்ள அவர், அரசு அறிவித்துள்ள இந்த நலத் திட்டம் முழுமையாக உரியவருக்குச் செல்ல வங்கிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்