விசாரணைக்கு அழைத்து சென்றவர் உயிரிழந்த விவகாரம் - மூன்று போலீசாருக்கு எதிராக குற்றப்பத்திரிகை
கடந்த 2012ம் ஆண்டு மொபைல் பறிக்க முயன்றதாக நித்தியராஜ் என்பவரை ஐ.சி.எப். காவல் நிலைய ஓட்டுனர் நடராஜன் மற்றும் FRIENDS OF POLICE ஆக இருந்த சுனில்குமார் ஆகியோர், காவல் நிலையம் அழைத்து சென்றனர்.
அங்கிருந்து நித்தியராஜ், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறைக்கு கொண்டு சென்றபோது, உடலில் கடுமையான காயங்கள் உள்ளதாக கூறி ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
மருத்துவமனைக்கு சென்று திரும்பிய நித்தியராஜ் உயிரிழந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சிபிசிஐடி, ஐ.சி.எப். காவல் நிலைய அப்போதைய ஆய்வாளர் ராமலிங்கம், காவலர்கள் ஆனந்த் வினோத் சிங் மற்றும் விஜயகுமார் ஆகியோருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
அதில், நித்தியராஜின் கை, கால்களை கட்டி தொங்கவிட்டு, பிளாஸ்டிக் பைப் மற்றும் லத்தியால் தாக்கியதால் ஏற்பட்ட காயம் காரணமாகவே அவர் உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது.