புத்த மதப்படி இறுதி சடங்கு.. ஊர்வலமாக வந்த ஆம்ஸ்ட்ராங் உடல்.. கண்ணீர் வடிய நடந்து வந்த நடிகர்

x

மறைந்த பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர், ஆம்ஸ்ட்ராக்கிற்கு புத்த மத வழக்கப்படி இறுதி சடங்கு நடத்தப்பட்டது.

படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் உடல் எம்பார்மிங் செய்யப்பட்டு, அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்படடது. உடலை கட்சி அலுவலகத்தில் நல்லடக்கம் செய்ய அனுமதி கோரியிருந்த நிலையில், மாநகராட்சி நிர்வாகம் அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டது. இந்த நிலையில் 700-க்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனிடையே, உயர்நீதிமன்றத்தில் அனுமதி பெற மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு அவசர வழக்காக விசாரணைக்கு வருகிறது. இந்நிலையில் இரவு 9:45 மணிக்கு அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் இருந்து புறப்பட்ட இறுதி உர்வல வாகனம், நல்லிரவு 12.45 மணியளவில் அயனாவரம் இல்லத்திற்கு வந்து சேர்ந்தது. அங்கு அமைச்சர் சேகர் பாபு, காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். புளியந்தோப்பு, பட்டாளம், செங்கை சிவன் பாலம் உள்ளிட்ட பல பகுதிலை சேர்ந்த மக்கள் வழிநெடுக அஞ்சலி செலுத்தனர். நடிகர்கள் தீனா , பாடகர் கானா பாலா உள்ளிட்ட திரை பிரபலங்களும் ஊர்வலத்தில் பங்கேற்றனர்.மறைந்த ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அயனாவரம் இல்லத்தில் புத்த மத வழக்க படி இறுதி சடங்கு நடத்தப்பட்டது


Next Story

மேலும் செய்திகள்