``ராஜீவ்காந்திக்கு செய்தது போல செய்யுங்கள்'' - ஆர்ம்ஸ்ட்ராங் மனைவிக்கு நீதிபதி அறிவுரை

x

ஆம்ஸ்ட்ராங் உடல் அடக்கம் தொடர்பான வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, இறந்த நபர் நல்ல முறையில் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்பதால் இப்போதைக்கு அரசு ஒதுக்கும் இடத்தில் அடக்கம் செய்யுங்கள் என்று நீதிபதி தெரிவித்தார்.

பெரம்பூரில் மனுதாரர் தெரிவிக்கும் 7 ஆயிரத்து 500 சதுர அடி நிலம் குடியிருப்பு பகுதி என்பதால் அதில் எப்படி அனுமதி வழங்க முடியும்? என கேள்வி எழுப்பிய நீதிபதி

நாங்கள் யாருக்கும் எதிரானவர்கள் அல்ல என குறிப்பிட்டார்.

விஜயகாந்த் உடல் அடக்கத்திற்கு அரசே அனுமதி வழங்கியது என குறிப்பிட்ட நீதிபதி , மனுதாரர் விண்ணப்பத்தை மாநகராட்சி நிராகரித்துள்ளதாகவும் அரசு தான் உங்கள் கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

ராஜீவ் உடல் டில்லியில் தகனம் செய்யப்பட்ட நிலையில் அவருக்கு ஸ்ரீபெரும்புதூரில் நினைவிடம் கட்டப்பட்டதாகவும்

அதேபோல உடலை அடக்கம் செய்து விட்டு பிறகு வேறு இடத்தில் மணிமண்டபம் கட்டலாம் என்றும் நீதிபதி கருத்து தெரிவித்தார்.

ஒதுக்குபுறமாக, விசாலமான இடத்தை தேர்ந்தெடுத்து

அரசு அனுமதி பெறலாம் என்றும் அது அம்பேத்கர் மணிமண்டபம் போல விசாலமாக இந்தால் எதிர்காலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்த இடையூறு இருக்காது எனவும் நீதிபதி தெரிவித்தார்.

நாளை பள்ளி திறக்கப்பட உள்ளதால் இன்றுக்குள் ஆம்ஸ்ட்ராங் உடல் புதைக்கப்பட வேண்டும் என்றும் நீதிபதி அறிவுறுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்