தப்பைதட்டிக்கேட்ட போலீஸ் - நடுரோட்டில் இளைஞர் எடுத்த முடிவு
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சின்னவளையம் தேசிய நெடுஞ்சாலையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பூவானிப்பட்டு கிராமம் சிறுவடித் தெருவை சேர்ந்த மணிகண்டன் என்பவர் உரிய ஆவணங்கள் இல்லாமல் பைக் ஓட்டி வந்த நிலையில், அவரிடம் இருந்து போலீசார் பைக்கை பறிமுதல் செய்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த இளைஞர், ஜெயங்கொண்டம் நால்ரோடு பகுதியில் வைத்து உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விசாரணையில், இளைஞர் மதுபோதையில் இருந்தது தெரியவர, அவரை மீட்ட போலீசார் காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story