உயிரை பறித்த மொபைல் App.. மக்கள் அதிர்ச்சி
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள குவாகம் கிராமத்தை சேர்ந்தவர் மணிவாசகம். சிப்காட் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் ஊழியராக பணியாற்றி வந்த இவருக்கு திருமணமாகி மகன் ஒருவர் உள்ளார். இந்நிலையில், லோன் -ஆப் மூலம் 50 லட்ச ரூபாய் வரை கடன் பெற்ற இளைஞர், பணம் முழுவதையும் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு இழந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்பட்ட மணிவாசகம், கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதன் பின்னணி குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story