போனில் கேட்ட பெண் குரல்..ரூ.71 லட்சத்தை தூக்கி கொடுத்து கனவுலகத்தில் மிதந்தவருக்கு ஷாக்

x

போனில் கேட்ட பெண் குரல்..ரூ.71 லட்சத்தை தூக்கி கொடுத்து கனவுலகத்தில் மிதந்தவருக்கு ஷாக்

ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என்று கூறி ரூபாய் 71 லட்சம் மோசடி செய்த 2 பெண்கள் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அரியலூர் மாவட்டம் இலுப்பையூரை சேர்ந்தவர் கருணாமூர்த்தி. உரக்கடை நடத்தி வந்த இவரை தொடர்பு கொண்டு சிலர் குறிப்பிட்ட வெப்சைட்டில் முதலீடு செய்தால் தினமும் வருமானம் கிடைப்பதுடன், அதிக லாபம் பெறலாம் என்று ஆசை வார்த்தைகள் கூறி உள்ளனர். இதை நம்பிய கருணாமூர்த்தி பல்வேறு வங்கி கணக்குகளில் சிறிது சிறிதாக செலுத்திய 71 லட்சத்து 28 ஆயிரம் ரூபாயை பெற்றுக் கொண்டு மோசடி செய்துள்ளனர். இதுகுறித்து கருணாமூர்த்தி அரியலூர் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் கொடுத்தார்.

விசாரணையில் நூதன மோசடியில் ஈடுபட்டது கோயம்புத்தூரை சேர்ந்த ரியாஸ் கான், ரம்யா,

மகேஸ்வரி என்பது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து அந்த 3 பேரையும் சைபர் கிரைம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்