மது குடிக்கும்போது தகராறு.. மாறி மாறி கத்தியால் குத்திக் கொண்ட உறவினர்கள் -ஸ்பாட்டிலேயே பறிபோன உயிர்
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே, தன்னை கத்தியால் தாக்கியவரை திருப்பி தாக்கியதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது. வேம்பங்குடி பகுதியைச் சேர்ந்த உறவினர்களான அருள், ஆறுமுகம் ஆகிய இருவரும் மது அருந்திக் கொண்டிருக்கும்போது தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அருள் தன்னிடம் இருந்த கத்தியை கொண்டு ஆறுமுகத்தை பலமாக குத்தியுள்ளார். கையில் பலத்த காயம் அடைந்த ஆறுமுகம், சுதாரித்துக் கொண்டு அந்த கத்தியை பிடிங்கி அருளை பலமாக தாக்கியதாக கூறப்படுகிறது. இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அருள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Next Story