உயர்கிறதா ஆட்டோ கட்டணம்? - தமிழக அரசு சொன்ன தகவல்

x

உயர்கிறதா ஆட்டோ கட்டணம்? - தமிழக அரசு சொன்ன தகவல்

தமிழகத்தில், ஆட்டோ கட்டணங்கள் 12 வாரங்களில் மாற்றியமைக்கப்படும் என, தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. பெட்ரோல், டீசல் விலைக்கு ஏற்ப ஆட்டோ கட்டணங்களை மாற்றியமைக்க உத்தரவிடக் கோரி ராமமூர்த்தி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு, விசாரணைக்கு வந்த போது, ஆட்டோ கட்டணங்களை மாற்றியமைப்பது தொடர்பாக, தொழிற்சங்கங்கள், டிரைவர்கள், நுகர்வோர் அமைப்புக்களிடம் கருத்துக்களைப் பெறுவதற்காக போக்குவரத்துத் துறை இணை ஆணையர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், இதுசம்பந்தமாக 12 வாரங்களில் இறுதி முடிவு எடுக்கப்படும் என, அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்