ரயில் கண்ணாடியை உடைத்து ரகளை.. ரத்தம் சொட்ட சொட்ட மயங்கியதால் பரபரப்பு.. பகீர் காட்சி

x

ரயில் கண்ணாடியை உடைத்து ரகளை.. ரத்தம் சொட்ட சொட்ட மயங்கியதால் பரபரப்பு.. பகீர் காட்சி

அரக்கோணம் ரயில் நிலையத்தில், மது போதையில் போலீசை வம்புக்கு இழுத்த நபர், ரயில் கண்ணாடியை உடைத்து ரத்தம் சொட்ட சொட்ட ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அரக்கோணம் ரயில் நிலையத்தில் மும்பையில் இருந்து நாகர்கோவிலுக்கு செல்லும் வாராந்திர சிறப்பு ரயில், மாலை 5 மணி அளவில் ஆறாம் நடைமேடைக்கு வந்த‌து. அப்போது, மது போதையில் இருந்த ஒருவர், அங்கு கலாட்டா செய்து கொண்டிருந்தார். அவரை அப்புறப்படுத்த முயன்ற ரயில்வே போலீசாரிடம் கடும் வாக்குவாத‌த்தில் ஈடுபட்டார். திடீரென ரயிலில் நடத்துநர் பெட்டியின் கண்ணாடியை ஓங்கி குத்தி உடைத்தார். இதனால், அவரது கையில் கண்ணாடி கிழித்து, நடைமேடை முழுவதும் ரத்தம் கொட்டியது. தொடர்ந்து ரகளையில் ஈடுபட்ட நபரை பத்துக்கும் மேற்பட்ட போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில், அவர் கடலூரை சேர்ந்த கிருஷ்ணகுமார் என்பதும், அரக்கோணத்தில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதும் தெரிய வந்த‌து. இதையடுத்து, ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால், 40 நிமிடம் தாம‌தமாக ரயில் புறப்பட்டு சென்றது.


Next Story

மேலும் செய்திகள்