``பொருள் அந்த மாதிரி வர்மா..!'' சென்டிமென்டை உடைத்த Apple..! அட்டகாச அம்சங்களுடன் லான்ச்சான ஐபோன்16
அசத்தலான அப்டேட்டுகளுடன் வெளியாகியுள்ள ஐபோன் 16 சீரிஸ் குறித்து விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்..
பெரும் எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில், ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 16 சீரிஸ் ஃபோன்கள் அறிமுகமாகி இளைஞர்களை கவர்ந்துள்ளது..
இட்ஸ் க்ளோ டைம் நிகழ்வில், அடிப்படை மாடலான ஐபோன் 16, ஐபோன் 16 ப்ளஸ், ஐபோன் 16 ப்ரோ, ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ், உள்ளிட்ட மாடல்கள் அறிமுகமாகியுள்ளன..
ஐபோன் 16 மாடல் 6.1 இன்ச் டிஸ்பிளேவுடனும், ஐபோன் 16 பிளஸ் 6.7 இன்ச் டிஸ்பிளேவுடனும், ப்ரோ மாடல் 6.3 இன்ச் டிஸ்பிளே வசதியுடனும், ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் மாடல் 6.9 இன்ச் டிஸ்பிளேயுடனும் வடிவமைக்கப்பட்டுள்ளன.
அதே போல் இந்த மாடல்கள், பிளாக் டைட்டானியம், ஒயிட் டைட்டானியம், நேச்சுரல் டைட்டானியம், புதிய டெசர்ட் டைட்டானியம் ஆகிய 4 நிறங்களில் கிடைக்கின்றன.
கூடுதல் சிறப்பம்சமாக, 48 மெகாபிக்சல் ஃப்யூசன் கேமரா இடம்பெற்றுள்ளதால் டால்பி விஷனில் 4K வீடியோ பதிவு செய்ய முடியுமாம்..
இது மட்டுமல்லாமல் புதிய கேமரா கண்ட்ரோல் பட்டன் இடம்பெற்றுள்ளதால் ஆட்டோ ஜூம் உள்ளிட்ட வசதிகள் கிடைக்கும்.
இதுமட்டுமா, இந்த நிகழ்வில், ஆப்பிள் வாட்ச், ஏர் பட்ஸ், iOS 18 உள்ளிட்டவையும் அறிமுகப்படுத்தப்பட்டது.
ஆப்பிள் ஐபோன் 16, 79 ஆயிரத்து 900 ரூபாயில் இருந்தும், 16 பிளஸ் 89 ஆயிரத்து 900 ரூபாயில் இருந்தும் விற்பனையாகிறது..
அதே வேளையில் ஐபோன் 16 ப்ரோ, 1 லட்சத்து 19 ஆயிரத்து 900 ரூபாயில் இருந்தும், ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் 1 லட்சத்து 44 ஆயிரத்து 900 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
இதில் கூடுதல் ஸ்டோரேஜ்க்கு ஏற்ப போன்களின் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வாட்ச் சீரிஸ் 10 ன் விலை 46 ஆயிரத்து 900 ரூபாயாகவும், ஆப்பிள் வாட்ச் எஸ்.ஈ. 24 ஆயிரத்து 900 ரூபாயாகவும் உள்ளது.
ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 89 ஆயிரத்திற்கும், ஏர்பாட்ஸ் 4, 12 ஆயிரத்து 900 ரூபாயில் இருந்து விற்பனையாகிறது.
செப்டம்பர் 13-ம் தேதி இந்தப் புதிய ஐபோன்களை முன்பதிவு செய்யலாம் என்றும் செப்டம்பர் 20-ம் தேதி இந்த போன்கள் விற்பனைக்கு வரும் என ஆப்பிள் நிறுவனம் கூறியுள்ளது.