"கொலை குற்றங்கள் நடந்துட்டு தான் இருக்கும்.. ஆக்ஷன் எடுக்கலேனா ஏன்னு கேளுங்க" - சபாநாயகர்
திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காட்டில் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு பாட புத்தகங்களை வழங்கினார். பின்பு பேசிய அவர், தமிழ்நாட்டில் எந்த குற்றங்கள் நடந்தாலும் நடவடிக்கை எடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்றும், எடுக்காமல் இருந்தால்தான் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேட்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
Next Story