கிரிவலத்தில் நடமாடும் சமூக விரோதிகள்?..."ஒவ்வொரு பவுர்ணமி நாட்களும்.."

x

கிரிவலத்தில் நடமாடும் சமூக விரோதிகள்?..."ஒவ்வொரு பவுர்ணமி நாட்களும்.." - திருவண்ணாமலையில் இப்படியும் நடக்கிறதா?

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் சாதுக்களின் கைரேகைகளை கைரேகை நிபுணர்கள் சேகரித்து வருகின்றனர்...திருவண்ணாமலையில் பவுர்ணமி தினங்களில் லட்சக்கணக்கில் பக்தர்கள் கிரிவலம் வருவர்... தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து சாதுக்கள் என்ற போர்வையில் வந்து கிரிவலம் வருபவர்கள் பக்தர்களுக்கு விபூதி பூசுவது, தொந்தரவு செய்து, யாசகம் கேட்பது, பெண் பக்தர்களிடம் வழிப்பறியில் ஈடுபடுவது தொடர்கதையாகி உள்ளது... மேலும் குழந்தைகளை வைத்து யாசகம் கேட்கும் செயல்களும் ஆங்காங்கே நடந்து வருகின்றன... இவை குறித்து புகார்கள் குவிந்துள்ள நிலையில், திருவண்ணாமலை காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில் சுமார் 10க்கும் மேற்பட்ட கைரேகை நிபுணர்களைக் கொண்டு கைரேகை சேகரிக்கும் பணி கிரிவலப் பாதையில் 5க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்றது. இதன் மூலம் சாதுக்கள் என்ற பெயரில் உலா வரும் சமூக விரோதிகள் நடமாட்டம் மட்டுப்படுத்தப்படும் என காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தெரிவித்தார்...

மேலும் இந்த நடவடிக்கை வரும் ஒவ்வொரு பவுர்ணமி நாட்களிலும் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது...


Next Story

மேலும் செய்திகள்