20 ஆண்டுகளாக வலியில் துடிதுடிப்பு...கைகொடுத்த முதல்வரின் அதிரடி திட்டம்

x

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அரசு மருத்துவமனையில் 55 வயது பெண்ணுக்கு வெற்றிகரமாக இடுப்பு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.அந்தியூர் தெப்பக்குளம் வீதியைச் சேர்ந்தவர் சகுந்தலா... கடந்த 20 ஆண்டுகளாக இடுப்பு மற்றும் கால் வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். அவருக்கு இடுப்பு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள அந்தியூர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் முடிவு செய்தனர். இந்நிலையில், ஈரோடு அரசு மருத்துவமனை எலும்பு முறிவு அறுவை சிகிச்சை நிபுணர்கள் ராஜ்குமார், மோகன்குமார் உள்ளிட்ட மருத்துவக் குழுவினர் அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். சுமார் 4 மணி நேர அறுவை சிகிச்சைக்கு பின்னர் வெற்றிகரமாக சகுந்தலாவின் வலது இடுப்பு மூட்டு எலும்பு மாற்றப்பட்டது. சென்னை, கோவை உள்ளிட்ட பெரு நகரங்களில் செய்யக்கூடிய அறுவை சிகிச்சை, கிராமப்புறத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவசமாக மேற்கொள்ளப்பட்டு இருப்பது, பாராட்டுகளைப் பெற்று வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்