பந்தலூரில் மேலும் ஒரு சிறுத்தை?...பீதியில் தொழிலாளர்கள்
நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதியில், சிறுத்தை தாக்கி சமீபத்தில் 3 வயது குழந்தை பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது அந்த சிறுத்தை பிடிக்கப்பட்டு, வண்டலூர் உயிரியல் பூங்காவில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதே பகுதியில் மேலும் ஒரு சிறுத்தை இருப்பதாக ஒரு சிலர் கூறி வருகின்றனர். இதனால், பாரி அக்ரோ என்ற தனியார் தேயிலை தோட்டத்தில் உள்ள வடமாநில தொழிலாளர்கள், வேலைக்கு வர மறுப்பு தெரிவித்தனர். இதனையடுத்து, வேலைக்கு வருமாறு வற்புறுத்திய தேயிலை தோட்டத்தின் மேலாளருக்கும், வடமாநில தொழிலாளர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
Next Story