பட்டமளிப்புக்கு வராத அமைச்சருக்கு ஆளுநர் முன்னாலே வணக்கம் தெரிவித்த அண்ணா பல்கலை. துணைவேந்தர்

x

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் நடைபெற்ற அண்ணா பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழாவை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி புறக்கணித்தார்.

சென்னை கிண்டியில் உள்ள வளாகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின்‌ 44-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை தாங்கி மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். ஒன்றரை மணி நேரம் நின்ற இடம் நகராமல் ஆளுநர் பட்டங்களை வழங்கினார். 932 பேர் நேரடியாகவும், 1 லட்சத்து 13 ஆயிரத்து 959 மாணவர்கள் கல்லூரி வாயிலாகவும் பட்டம் பெற்றனர்.‌ 66 மாணவர்கள் தங்கப்பதக்கம் பெற்றனர். ஆளுநர் தலைமையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி புறக்கணித்துள்ளார். சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதனுக்கு ஒரு ஆண்டு பதவி நீட்டிப்பு வழங்கிய ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் புறக்கணிப்பு எனக் கூறப்படுகிறது. இதேபோல் உயர்கல்வித்துறை செயலாளரும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கவில்லை எனக் கூறப்படுகிறது.

அண்ணா பல்கலைக் கழகத்தின் 44வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற ஆளுநரை வரவேற்று பேசிய துணை வேந்தர் வேல்ராஜ், அமைச்சர் பங்கேற்காதது குறித்தும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்