மீண்டும் சண்டை போடும் திமுக - பாஜக.. அட்டாக் பாலிட்டிக்ஸை கையிலெடுத்த அண்ணாமலை

x

தென்னக ரயில்வேயில் தமிழ்நாட்டிற்கு இரட்டைப்பாதை, அகலப்பாதை, தண்டவாள சீரமைப்பு பணிகளுக்கான நிதி அதிகரிக்கப்பட்டுள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

ரயில்வே திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை உறுதி செய்யக்கோரி, ரயில்வே அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ள நிலையில், அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார். அதில், நிலம் கையகப்படுத்துவதில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை பொறுத்துதான் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார். ரயில்வே திட்டங்களுக்காக நிலம் கையகப்படுத்தப்படும் பணி தற்போது எந்த நிலையில் உள்ளது என்பது குறித்து தமிழ்நாடு அரசு விளக்கம் அளிக்க முடியுமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். திமுக - காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில், சராசரியாக 879 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும், ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். நடப்பாண்டு தமிழ்நாட்டிற்கு 6 ஆயிரத்து 362 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதே அதற்கான சான்று என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்