தர்மபுரி மக்களுக்கு உறுதி அளித்த அண்ணாமலை

x

ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை தமிழக அரசு சரியாக செயல்படுத்தவில்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். தர்மபுரியில் என் மண், என் மக்கள் யாத்திரை மேற்கொண்டு பேசிய அவர், தர்மபுரி-மொரப்பூர் ரயில் பாதையை பயன்பாட்டிற்குக் கொண்டு வர மத்திய அரசு தீவிரமாக செயல்பட்டு வருவதாகக் கூறினார். மீண்டும் பாஜக ஆட்சி அமைந்தவுடன் பாப்பாரப்பட்டியில் பாரத மாதா கோவில் கட்டப்படும் என்றும், காவிரி உபரி நீர் திட்டத்தை தர்மபுரி மாவட்டத்தில் செயல்படுத்தினால் சுமார் ஒரு லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும் என்றும் அவர் பேசினார்.


Next Story

மேலும் செய்திகள்