சர்ச்சையில் சிக்கிய பாலய்யா வீடியோ - மனம் திறந்த அஞ்சலி
தானும், நடிகர் பாலாகிருஷ்ணாவும் பரஸ்பரம் மிகுந்த மரியாதை கொண்டுள்ளதாக நடிகை அஞ்சலி தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற GANGS OF GODAVARI திரைப்பட நிகழ்ச்சியில், மேடையில் அஞ்சலியை நடிகர் பாலகிருஷ்ணா தள்ளிவிட்டது சர்ச்சையானது. இந்த சூழலில், அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற வீடியோவை பகிர்ந்த அஞ்சலி, தானும் பாலகிருஷ்ணாவும் நீண்ட நாட்களாக நட்புடன் பழகி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். அவருடன் மேடையை பகிர்ந்துக்கொண்டது அருமையான தருணம் எனவும் அஞ்சலி நெகிழ்ந்துள்ளார்.
Next Story