``இது ரூ.11 லட்சமா?'' வீடியோவால் வினை... தொக்காக சிக்கிய அனிதா சம்பத்... சம்பவம் செய்த TNFC
காஞ்சிபுரம் மாவட்டம், கொழுமணிவாக்கத்தில் உள்ள ஒரு கோயில் குளத்தில் படிக்கட்டு கட்ட 11 லட்சம் செலவிடப்பட்டதாக சின்னத்திரை பிரபலம் அனிதா சம்பத் பேசிய காணொளி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. ஆனால், அது உண்மையல்ல என தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு குழு தெரிவித்துள்ளது. அந்த கோயிலில், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் திருக்குளத்தின் நடைபாதை, படிக்கட்டுகள் மட்டுமின்றி நீர் வரத்து மற்றும் வெளியேறும் வழி, மின்விளக்குகள் சிமெண்ட் இருக்கைகள் உள்ளிட்டவையும் அமைக்கப்பட்டுள்ளன என்று அந்தக் குழு தெரிவித்துள்ளது. இதற்கான மொத்த செலவுதான் 11 லட்சத்து 36 ஆயிரம் ரூபாய் என்றும் அந்தக் குழு தெரிவித்துள்ளது.
Next Story