"தண்டனை உறுதி"... பதவியேற்றஅடுத்த நாளே சாட்டையை சுழற்ற ஆரம்பித்த நாயுடு

x

ஆந்திரா முதலமைச்சராக 4-வது முறையாக சந்திரபாபு நாயுடு பதவி ஏற்றார். இதைதொடர்ந்து, ஆந்திராவில் இருந்து திருப்பதிக்கு வந்தார். இன்று காலை வி.வி.ஐ.பி பிரேக் தரிசனத்தில் சந்திரபாபு நாயுடு ஏழுமலையானை தரிசனம் செய்தார். சந்திரபாபு நாயுடு குடும்பத்தினருக்கு திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் பட்டு வஸ்திரம் மற்றும் பிரசாதங்களை வழங்கி கவுரவித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு,

நிர்வாக சீர்திருத்தத்தை திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகத்தில் இருந்து தொடங்க உள்ளதாக கூறினார். கடந்த 5 ஆண்டுகளில் தேவஸ்தான நிர்வாகத்தில் ஊழல் நடைபெற்றிருப்பதாகவும் அதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் தெரிவித்த அவர், ஊழலுக்கு காரணமானவர்களுக்கு தண்டனை உறுதி எனக் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்