மருமகனுக்கு வாழ்நாள் முழுவதும் மறக்கவே முடியாத மெகா விருந்து... தாங்கு தாங்குனு தாங்கிய மாமியார்

x

மருமகனுக்கு வாழ்நாள் முழுவதும் மறக்கவே முடியாத மெகா விருந்து... தாங்கு தாங்குனு தாங்கிய மாமியார்

ஆடி மாதம் முடிந்து மனைவியை அழைத்துச் செல்ல மாமியார் வீட்டுக்கு வந்த மருமகனுக்கு 100 வகை பலகாரங்களுடன் விருந்து வைத்து அசத்தியுள்ளார் மாமியார் ஒருவர்... இதுபற்றிய ஒரு செய்தித் தொகுப்பைப் பார்க்கலாம்...

இப்படி விழுந்து விழுந்து கவனிக்கும் மாமியார் வீட்டையெல்லாம் திரைப்படங்களில் தானே பார்த்திருப்போம்...

ஆனால் இவரோ ரீல் மாமியார் அல்ல...வீட்டுக்கு வந்த தன் மருமகனை விருந்தாலேயே அசரடித்துள்ளார் இந்த ரியல் மாமியார்...

புதுமணத் தம்பதியை ஆடி மாதத்தில் பிரித்து வைப்பது எப்படி தமிழ் வழக்கமோ...அதேபோல் தெலுங்கிலும் உண்டு...

அங்கு அதை ஆஷாட மாதத்தில் தெலுங்கர்கள் கடைபிடிக்கின்றனர்...

இப்போது ஆஷாட மாதம் முடிந்து விட்டதால் அம்மா வீட்டுக்கு சென்ற மனைவியை திருப்பிக்கூட்டி வரச் சென்ற கணவருக்குத் தான் இந்த அசத்தல் விருந்து...

ஆந்திர மாநிலம்....தமரோட கிராமத்தைச் சேர்ந்த ரத்ன குமாரிக்கும் காக்கிநாடாவைச் சேர்ந்த ரவி தேஜாவுக்கும் கடந்த ஆண்டு செப்டம்பரில் திருமணம் இனிதே நடந்தேறியது...

ஆஷாட மாதம் என்பதால் தன் மனைவி ரத்னகுமாரியை மாமியார் வீட்டில் விட்டு விட்டுச் சென்றிருந்தார் ரவிதேஜா...

ஆஷாடம் முடிந்து இப்போது சிராவண மாதம் பிறந்து விட்டது...

அதனால் மீண்டும் ரத்னகுமாரியை அழைத்துச் செல்ல மாமியார் வீட்டுக்கு வந்தார் ரவிதேஜா...

வீட்டில் ஒரு அறைமுழுக்க 100 வகையான பலகாரங்கள்...எதைப் பார்ப்பது என்றுகூட தெரியவில்லை...தன் முன் அடுக்கி வைக்கப்பட்ட உணவு வகைகளைக் கண்டு மலைத்துப் போனார் மருமகன் ரவிதேஜா...

தன் மகனைப் போல் மருமகனைப் பார்க்கும் மாமியாரின் பாசம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது...


Next Story

மேலும் செய்திகள்