நள்ளிரவில் கேட்ட பயங்கர சத்தம்.. தூள் தூளாக நொறுங்கிய வீடு.. பார்க்கும்போதே பதறும் நெஞ்சம்
ஆந்திர மாநிலத்தில், உரிய அனுமதியின்றி வீட்டில் பட்டாசு தயாரித்த போது ஏற்பட்ட வெடி விபத்தில் இரண்டு பேர் பலியாகினர்.
சித்தூர் மாவட்டம், மாரேடுபள்ளி கிராமத்தை
சேர்ந்த காதர் பாஷா, தனது குடிசை வீட்டில் அனுமதி இல்லாமல் பட்டாசு தயாரித்து வந்தார். நேற்று நள்ளிரவு 12 மணி அளவில், திடீரென்று வீட்டில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடித்து சிதறின. இந்த வெடி விபத்தில் வீடு தூள் தூளாக நொறுங்கியதில், வீட்டின்அருகே கட்டி வைக்கப்பட்டிருந்த பசு மாடு இறந்தது. வீட்டில் தங்கியிருந்த காதர் பாஷா, அவருடைய மனைவி ரேஹானா ஆகியோர் இடிபாடுகளில் சிக்கி, தீக்காயம் அடைந்து உயிருக்கு போராடிய நிலையில், உள்ளூர் மக்கள் ஆம்புலன்ஸ் மூலம் சித்தூர் அரச மருத்துவமனையில் அவர்களை சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இருவரும் மரணம் அடைந்தனர். கங்கவரம் போலீசார் இது பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.