சாட்டை எடுத்த அமைச்சர்.. பாய்ந்து வந்து முட்டிய வண்டி மாடு..ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பிய அமைச்சர் உயிர்

x

ஆந்திராவில் கோவில் திருவிழாவில் பங்கேற்ற அமைச்சர் மீது வண்டி மாடு பாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பிரகாசம் மாவட்டம் பல்லெட்டிபூடி கிராமத்தில் நடைபெற்ற அம்மன் கோவில் திருவிழாவில் அமைச்சர் பால வீராஞ்சனேயசாமி பங்கேற்றார். அப்போது பொதுமக்கள் கேட்டுக்கொண்டதால் அவர் மாட்டு வண்டியை ஓட்ட தயாரானார். சாட்டையை கையில் எடுத்த அமைச்சர், போஸ் கொடுத்துவிட்டு வண்டியை ஓட்ட தயாரான போது, வண்டியில் பூட்டப்பட்டு இருந்த மாடு அவர் மீது பாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்