"ஆவடி அருகே சிப்காட் தொழிற்பேட்டை..!" அறிவுரை வழங்கிய அன்புமணி ராமதாஸ்

x

சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதற்கான ஆவடி அருகில் 626 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த சிப்காட் நிர்வாகம் தீர்மானித்துள்ளது. இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால், அப்பகுதிகளில் வாழக்கூடிய 10 ஆயிரம் குடும்பங்கள் தங்களின் வாழ்விடங்களை இழந்து உள்நாட்டு அகதிகளாக மாறுவார்கள் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். தொழில் வளர்ச்சி என்ற பெயரில் அப்பாவி மக்களின் வசிப்பிடத்தையும், அடையாளத்தையும் பறிக்க அரசே முயல்வது கண்டிக்கத்தக்கதாகும் என கூறியுள்ளார். சிப்காட் நிலவங்கிக்காக பயன்படாத நிலங்களை கையகப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்