``மதுரை இங்கே காத்துக்கிடக்க.. அங்கே திருமணத்திற்காக சர்வதேச விமான நிலையம்’’ - குமுறும் எம்.பி மாணிக்கம் தாகூர்

x

இந்நிலையில், மதுரை விமான நிலைய சர்வதேச அந்தஸ்து குறித்து விருதுநகர் எம்.பி மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ஜாம்நகர் விமான நிலையம் 10 நாள் திருமணத்திற்காக சர்வதேச விமான நிலையமாக மாறுகிறது என்றும், மதுரை விமான நிலையம், பல ஆண்டுகளாக கெஞ்சினாலும், இன்னும் சர்வதேச அந்தஸ்துக்காக காத்திருக்கிறது எனவும் பிரதமர் மோடியைக் குறிப்பிட்டு மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். மேலும், இது பாகுபாட்டின் உச்சம் என்று குறிப்பிட்டுள்ள அவர், தமிழ்நாட்டின் நியாயம் மற்றும் சமத்துவத்திற்கான நேரம் இது என தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்