பாம்பு கடித்து 11 வயது சிறுவன் உயிரிழப்பு..குமரியில் அதிர்ச்சி சம்பவம்

x

கன்னியாகுமரி மாவட்டத்தில் மங்கலம் அருகே மலையோர பகுதியான வெட்ட மலையில் பாம்பு கடித்து 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வலிய மலை கிராமத்தில் வசித்து வந்த மணிகண்டன் மகன் அபினேஷ், காட்டுப்பாதை வழியாக வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது சிறுவன் அபினேஷை பாம்பு கடித்துள்ளது. உடனடியாக சிறுவன் அபினேஷை துணியில் டோலி கட்டி காட்டு வழியே சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரம் சுமந்து வந்தும், மற்றொரு வாகனம் மூலம் குலசேகரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து குலசேகரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்