அம்மன் கோயில் தர்மகர்த்தாவான சிற்பி மனமுடைந்து த*கொலை.. வாட்ஸப், பேஸ்புக்கில் பரவும் வாய்ஸ் மெசேஜ்

x

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே அம்மன் கோயிலை நிர்வகிப்பதில் ஏற்பட்ட பிரச்சனையால், சிற்பி ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

மாமல்லபுரம் அடுத்த தேவனேரி கிராமத்தை சேர்ந்த சிற்பக்கலைஞர், கேசவன். இவர், அந்த பகுதியில் இருந்த அம்மன் கோயிலை நிர்வகித்து வந்துள்ளார். கோயிலை நிர்வகிப்பதில், இவருக்கும், அப்பகுதியை சேர்ந்த வேறு சிலருக்கும் இடையே பிரச்சனை நிலவி, கைகலப்பு வரை சென்றுள்ளது. இந்நிலையில், கேசவன், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். தற்கொலைக்கு முன், தனது தற்கொலைக்கான காரணம் மற்றும் காரணமான நபர்கள் குறித்து வாட்ஸ் ஆப் மற்றும் முகநூலில் பகிர்ந்துள்ளார். இந்நிலையில், குற்றவாளிகளை கைது செய்யக்கோரி, கேசவனின் உறவினர்கள் மற்றும் தேவனோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து, பேச்சுவார்த்தைக்குப்பின் அவர்கள் கலைந்து சென்றனர். இறப்பதற்கு முன் கேசவன் குற்றம்சாட்டிய 6 பேரில், முனுசாமி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். மீதமுள்ள 5 பேரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்