கொளுத்தி எடுக்கும் வெயில்.. தாங்க முடியாமல் தனியே கழண்டு விழுந்த லிங்கனின் தலை
அமெரிக்காவில் கடும் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், வாஷிங்டனில் வைக்கப்பட்டுள்ள லிங்கனின் மெழுகு சிலை உருகத் தொடங்கியுள்ளது. கடந்த சில வாரங்களாக அமெரிக்காவில் கடும் வெயில் வாட்டி வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில், வா ஷிங்டனில், முன்னாள் அதிபர் ஆபிரகாம் லிங்கனின் நினைவு இல்லத்திற்கு வெளியே வைக்கப்பட்டுள்ள அவரது மெழுகு சிலை, வெப்பத்தின் காரணமாக உருகத் தொடங்கியுள்ளது. சிலையின் தலை கீழே விழுந்த நிலையில் உடலின் பிற பாகங்களும் உருகி வழியத் தொடங்கியுள்ளன. தற்போது, அப்பகுதியில் 100 டிகிரி பாரன்ஹீட்டை கடந்த வெயில் கொளுத்துவதால், சிலை உருகுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Next Story