அமெரிக்காவில் மலர்ந்த காதல் - காரைக்குடி பெண்ணை கரம்பிடித்த அமெரிக்க மாப்பிள்ளை
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியைச் சேர்ந்த இளம்பெண், அமெரிக்க இளைஞரை இந்து முறைப்படி திருமணம் செய்துகொண்டார். காரைக்குடி முத்துப்பட்டிணத்தைச் சேர்ந்த சிதம்பரம் - மீனா தம்பதியின் மகள் பிரியா, அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சியில், ஹெல்த் கேர் சென்டர் நடத்தி வருகிறார். இவருக்கும், அங்கு வழக்கறிஞராக பணியாற்றி வரும் சாம் என்ற இளைஞருக்கும் சமூகவலைதளம் வாயிலாக ஏற்பட்ட நட்பு, காதலாக மாறியது. இதையடுத்து, இருவீட்டார் சம்மதத்துடன், இருவரும் திருமணம் செய்துகொண்டனர். காரைக்குடியில் உள்ள மணமகள் வீட்டில், இந்து முறைப்படி நடைபெற்ற திருமணத்தில் இருதரப்பு உறவினர்களும் பங்கேற்றனர்.
Next Story