"ரூம் போட்டு யோசிப்பாங்களோ"அமேசானுக்கே ஆப்பு வைத்த தில்லாலங்கடி..!ஊழியர்களை கிறுகிறுக்க வைத்த மோசடி

x

திருச்சியைச் சேர்ந்த மேகராஜ் அமேசான் இணையதளம் மூலமாக லேப டாப் கம்ப்யூட்டர்களை ஆர்டர் செய்து இருக்கிறார். இந்த நிலையில் மேகராஜ் ஆர்டர் செய்த லேப்டாப்புகளை டெலிவரி செய்வதற்காக அர்ஷத்கான் என்ற ஊழியர் மேகராஜை தொடர்பு கொண்டு இருக்கிறார். இதனைத் தொடர்ந்து அர்ஷத்கானை திருச்சி விமானநிலையம் அருகே வரவழைத்து அவரிடம் இருந்து 16 லேப்டாப்புகளை பெற்ற மேகராஜ் சிறிது நேரத்தில் அதில் 5 லேப்டாப்களை ரிட்டர்ன் செய்து இருக்கிறார். இதனைத் தொடர்ந்து அலுவலகம் சென்று 5 லேப்டாப் பெட்டிகளைச் சோதனை செய்த போது அதில் லேப் டாப் இல்லாததால் அதிர்ச்சியடைந்து இருக்கின்றனர். மேலும் அமேசான் ஊழியருக்குச் சந்தேகம் ஏற்படாத வகையில் லேப்டாப் பெட்டிகளில் போலியான விலைப்பட்டியலை ஒட்டியதும் தெரியவந்துள்ளது. இந்த மோசடியால் அதிர்ச்சியடைந்த அமேசான் ஊழியர்கள் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் மேகராஜ் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்