நான் ஸ்டாப் ஆக்ஷனுக்கு தயாரா..? இன்னும் 4 நாட்களுக்கு..! பொளந்து கட்ட காத்திருக்கும் கனமழை
- தமிழ்நாட்டில் வரும் 24ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரித்துள்ளது...
- தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாக,
- அடுத்த 24 மணி நேரத்தில் கடலோர தமிழகத்தின் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அதேபோல புதுவை, காரைக்காலிலும் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம்,
- திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களிலும்,
- கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது.
- சென்னையை பொருத்தமட்டில், இடி மின்னலுடன் கூடிய மிதமான முதல் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தொடர்ந்து, வரும் 24ம் தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும், சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
- கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக குலசேகரப்பட்டினத்தில் 16 சென்டி மீட்டர் மழையும், சாத்தான்குளத்தில் 11 சென்டி மீட்டர் மழையும், பதிவாகியுள்ளது.
Next Story