காதலி மீது இளைஞர் பரபரப்புக் குற்றச்சாட்டு | Love Issue | Kanyakumari

x

குமரியில், காதலை மறைக்க தனது காதலி பலமுறை கொலை செய்ய முயன்றதாகவும், இளைஞர் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் கடமலை குன்று பகுதியைச் சேர்ந்த சர்ஜு, காவல்துறையில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், 14 ஆம் தேதி ஒரு கும்பல் தன்னை கடத்திச் சென்று, கையில் ஊசி போட்டுவிட்டு தோட்டத்தில் வீசிச் சென்றதாக கூறியுள்ளார். தனது தந்தை மூலம் மருத்துவமனைக்கு சென்றதாகவும் தெரிவித்துள்ளார். திக்கணங்கோடு பகுதியை சேர்ந் பெண்ணை காதலித்த‌தாகவும், அடிக்கடி ஜூஸ் கொடுத்து அந்த பெண் தனிமையில் இருக்க வைத்த‌தாகவும் கூறியுள்ளார். அந்த பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம் முடிவானதால், தனது காதலை மறைக்க இரண்டு முறை கொலை செய்ய முயன்றதாகவும், பெற்றோர் கூறியே விஷம் வைத்த‌தாக அந்த பெண் அனுப்பிய மெசேஜ்களையும் வெளியிட்டுள்ளார். மார்ச் மாதம் முதல் அந்த பெண்ணின் உறவினர்கள் கொலை செய்ய முயன்றதாகவும், போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் வேதனை தெரிவித்துள்ளார். புகாரை வாபஸ் வாங்கச் சொல்லி தற்போது கடத்தி ஊசி போட்டதாகவும், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் சர்ஜு கூறியுள்ளார். காதலை மறைக்க விஷம் வைத்து கொலை செய்ய முயன்றதாக புகார் அளித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்