நாயுடன் அரை நிர்வாணமாக அலப்பறை - மருத்துவமனையை களேபரமாக்கிய போதை ஆசாமி
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு, மது போதையில் நாய்களுடன் வந்த நபரால் பரபரப்பு நிலவியது. பாலக்கோடு அருகே கணபதி நகர் பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவர், மது போதையில் தனது வளர்ப்பு நாய்களுடன் மருத்துவமனைக்கு வந்தார். தன்னையும், தனது வளர்ப்பு நாய்களையும் சிலர் தாக்கிவிட்டதாகவும், தங்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கும்படியும் கூறி, அரை நிர்வாணமாக அலப்பறையில் ஈடுபட்டார். இந்த சம்பவம் நோயாளிகளை முகம்சுளிக்க வைத்தது
Next Story